Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவில் ஜப்பான் ரூ.48,000 கோடி முதலீடு

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவில் ஜப்பான் ரூ.48,000 கோடி முதலீடு

இந்தியாவுக்கு வந்த மொத்தப் பங்கு முதலீடான 1,981 கோடி டாலரில், ஜப்பானின் பங்கு சுமார் 29 சதவீதமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு செய்த நாடாக ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2026–27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு 571 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) முதலீடு வந்துள்ளது.


இந்தியாவுக்கு வந்த மொத்தப் பங்கு முதலீடான 1,981 கோடி டாலரில், ஜப்பானின் பங்கு சுமார் 29 சதவீதமாகும். சிங்கப்பூர் 522 கோடி டாலர் முதலீட்டுடன் இரண்டாவது இடத்திலும், மொரீஷியஸ் 240 கோடி டாலருடன் அடுத்த இடத்திலும் உள்ளன.

ஜப்பானின் MUFG வங்கி, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை ரூ.39,618 கோடிக்கு வாங்கியது. இந்திய நிதிச் சேவைத் துறையில் நடைபெற்ற மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக இந்த ஒப்பந்தம் குறிப்பிடப்படுகிறது.

வங்கிச் சேவைகள், தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, மின்கலங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ஜப்பானிய நிறுவனங்கள் முதலீட்டை விரிவுபடுத்தி வருகின்றன. உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் சர்வதேச வர்த்தக சிக்கல்கள் காரணமாக, ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் பொருள் விநியோகத்துக்கான புதிய இடங்களைத் தேடி வருகின்றன. இதில் இந்தியாவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக, இந்தியா 9 மாநிலங்களில் 12 ஜப்பானியத் தொழில் நகரங்களை அமைத்துள்ளது. இங்கு தொழில் தொடங்குவதற்கான நிர்வாக உதவி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த மாதம் ஜப்பானுக்குச் சென்றார். அப்போது நகோயா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான இலக்கை நோக்கி, ஜப்பானிய நிறுவனங்கள் இதுவரை ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.


முந்தைய செய்தி
சென்னையில் கிரெடாய் அமைப்பின் 5-வது ‘ஸ்டேட்கான் 2026’ மாநாடு: தொடங்கி வைத்தார் அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான்
அடுத்த செய்தி
தமிழகத்தில் ரூ.3,663 கோடி சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

தொடர்புடைய செய்திகள்